ராமநாதபுரம் மாவட்டத்தில் கொள்முதல் செய்த நெல்லை சேமித்து வைக்க சேமிப்பு கிடங்கு வசதி இல்லாமல் சாலைகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளதால் நெல்மூடைகள் கோடைமழையில் நனைந்து நெல்மணி வீணாகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்தது, அனைத்து நீர்நிலைகளும் கம்மாய்களும் வேகமாக நிரம்பின விவசாயத்திற்கு தேவையான நீரைவிட அதிகமாகவே நீர்நிலைகள் நிரம்பின.
கடந்த ஆண்டுகளை விட இந்தாண்டு தொடர் மழை பெய்து விவசாயம் செழிப்பாக நடைபெற்றது. குறிப்பாக நெல் விவசாயம் கடந்த ஆண்டுகளோடு ஒப்பிடும்போது அதிக பாதிப்பு இல்லாமல் நெல் மணிகள் விளைந்து விவசாயிகளுக்கு கைகொடுத்தது.
இந்நிலையில், அதிகஅளவில் நெல் கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு உதவ மாவட்ட நிர்வாகம் சார்பில் 84 நெல்கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் வைக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, போதிய பணியாளர்கள் இல்லாத நிலையில் கொள்முதல் செய்ய இடம் இல்லாத நிலை போன்றவற்றால் அறிவித்தபடி கொள்முதல் செய்ய முடியவில்லை.
இதற்கு, அந்த பகுதிகயில் உள்ள விவசாயிகள் தங்களின் எதிர்ப்பு தெரிவித்ததால் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து கொள்முதல் செய்த நெல்மூடைகள் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், கொள்முதல் செய்த நெல்மூடைகளையும், கொள்முதல் செய்ய கொண்டுவந்துள்ள நெல்மூடைகளும் அந்தந்த பகுதிகளில் உள்ள சாலைகளில் மூடைமூடையாக அடுக்கி வைத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இந்த மழையால் நெல்மூடைகள் மழையில் நனைந்து மூடைகளிலேயே முளைத்துவிடும் .
கொள்முதல் நன்றாக விளைந்தும் அதனை விற்று கடனை அடைக்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.