பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் நேற்று பள்ளி சிறப்பு வகுப்பு முடிந்து பேருந்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தபோது மாணவனின் அருகில் அமர்ந்து பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ராமநாதபுரம் பழைய செக்போஸ்ட் பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு பயிலும் மாணவன் வெள்ளிக்கிழமை 7 மணியளவில் பள்ளியில் சிறப்பு வகுப்பு முடித்துவிட்டு பேருந்தில் தன் வீட்டுக்கு சென்றுள்ளார்.
அப்போது, அந்த மாணவனின் அருகில் உள்ள சீட்டில் ஜகுபர் ஜலாலுதீன் (65) என்ற முதியவர் மாணவனுக்கு அருகில் அமர்ந்துள்ளார். பேருந்தில் பயணம் செல்லும் பொழுது தொடர்ந்து அந்த மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்த மாணவன் தடுத்து நிறுத்தியும் நிறுத்தாமல் தொடர்ந்து தொல்லை கொடுத்துள்ளார்.
இதையடுத்து, அந்த மாணவன் இறங்கும் பேருந்து நிறுத்தத்திற்கு முன்புள்ள கேணிக்கரை பேருந்து நிலையத்தில் இறங்கி கேணிக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மாணவனின் புகாரை அடுத்து அந்த முதியவரை கைது செய்து போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.