உலக யோகா தினம் (ஜூன் 21) நடைபெறவுள்ளதையொட்டி அதன் தொடர் முன்னோட்டமாக அஞ்சல் துறை சார்பாக ராமேஸ்வரம் பேக்கரும்பு பகுதியில் அப்துல் கலாம் நினைவிடத்தில் சிறப்பு யோகா நடைபெற்றது.
நாடு முழுவதிலும் உள்ள அஞ்சல் துறை சார்பாக உலக யோகா தினத்தை முன்னிட்டும், தொடர் முன்னோட்டமாக அஞ்சல் துறை சார்பில் நாடு முழுவதிலும் யோகா தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 2 தலைமை அஞ்சலகங்கள், 57 துணை அஞ்சலகங்கள் 247 கிளை அஞ்சலகங்கள் சார்பாக நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்துள்ள பேய்க்கரும்பு பகுதியில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவிட வாயிலில் நடைபெற்றது. ஒரு மணி நேரம் யோகா தின கொண்டாட்டத்தில் ராமநாதபுரம் அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் சித்ரா தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு யோகா பயிற்சி செய்தனர்.
இதையடுத்து, மாவட்டத்தின் மற்றொரு இடமான பாம்பன் பூங்கா பகுதியில் அஞ்சலக மேலாளர் மனோஜ் தலைமையில் 45 பேர் கலந்துகொண்டனர்.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(Ramanathapuram)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.