தேசிய திறனாய்வு தேர்வுக்கான ஹால்டிக்கெட்டுகளை இணையதளம் மூலம் நாளை முதல் (19.01.2022) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேர்வு துறையினர் தெரிவித்துள்ளனர்.
தேசிய திறனாய்வு தேர்வு ஜனவரி 23 அன்று நடைபெற இருந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக ஜனவரி 29-ல் நடைபெறுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தேசிய திறனாய்வுத் தேர்வு நடைபெறுகிறது. இத்தேர்வில் வெற்றி பெற்றால் ஒன்பதாம் வகுப்பு முதல் பண்ணிரெண்டாம் வகுப்பு வரை தொடர்ந்து 4 ஆண்டுகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்படுகிறது.
ஒன்பதாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை மாதம் ரூ.1000-யும் பதினொன்றாம் வகுப்பிற்கு ரூ.1250-யும் பன்னிரண்டாம் வகுப்பிற்கு ரூ. 2,000 மற்றும் ஆய்வு படிப்புகளுக்கு வழங்கப்படுகிறது.
இராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் 39 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஹால்டிக்கெட்டுகள் இணையதளத்தின் மூலமாக பதிவிறக்கம் செய்யலாம்.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், இராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.