Home /local-news /

மின்சாரம் தாக்கி ஆடு மேய்த்த தொழிலாளி பரிதாப பலி - அமைச்சர் சார்பில் நிதியுதவி..

மின்சாரம் தாக்கி ஆடு மேய்த்த தொழிலாளி பரிதாப பலி - அமைச்சர் சார்பில் நிதியுதவி..

மின்சார கம்பி அறுந்து விழுந்து ஆடு மேய்த்து கொண்டிருந்த தொழிலாளி பலி

மின்சார கம்பி அறுந்து விழுந்து ஆடு மேய்த்து கொண்டிருந்த தொழிலாளி பலி

Ramanathapuram | உயிரிழந்த 32 வயது மாரி கண்ணனுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்ற நிலையில் நேற்று அவரது மனைவி அபிராமிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் நீதிமன்றம் அருகே வயல்வெளியில் செம்மறி ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த தொழிலாளி மீது கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கியதில் ஆடு மேய்த்த தொழிலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    முதுகுளத்தூர் அருகே வாகைகுளம் கிராமத்தைச் சேர்ந்த மாரிக்கண்ணன் என்பவர் 200க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து பாதுகாத்து வருகிறார்.

    இந்நிலையில், முதுகுளத்தூர் நீதிமன்றம் அருகே வயல்வெளியில் தனது செம்மறி ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது வயல்வெளியில் அறுந்து கீழே விழுந்து கிடந்த மின் வயரில் இருந்து உயரழுத்த மின்சாரம் தாக்கியதில் மாரிக்கண்ணன் மற்றும் அவரது செம்மறி ஆடு ஒன்றும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

    முதுகுளத்தூர் போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக முதுகுளத்தூர் அரசுமருத்துவமனைக்கு கொண்டு சென்று விசாரித்து வருகின்றனர்.

    உயிரிழந்த 32 வயது மாரி கண்ணனுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்ற நிலையில் நேற்று அவரது மனைவி அபிராமிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது இதனால் அக்கிராமத்தில் உறவினர்கள் அனைவரும் சோகத்தில் உள்ளனர்.

    மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதனிடையே, மின்சாரம் தாக்கி உயிரிழந்த ஆடு மேய்க்கும் தொழிலாளி குடும்பத்திற்கு பிற்படுத்தபட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் சார்பில் 50 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டது. முதுகுளத்தூர் பேரூராட்சி தலைவர் ஜாஜகான் முதுகுளத்தூர் திமுக கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் பூபதி மணி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் சண்முகம் சட்டமன்ற அலுவலக உதவியாளர் ரஞ்சித் ஆகியோர் நேரில் சென்று ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கினார்

    செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
    Published by:Arun
    First published:

    Tags: Ramanathapuram

    அடுத்த செய்தி