Home /News /local-news /

நீண்ட நாட்களாக பூட்டியும் பராமரிப்பு இன்றியும் காணப்படும் மங்களதீர்த்த பூங்கா

நீண்ட நாட்களாக பூட்டியும் பராமரிப்பு இன்றியும் காணப்படும் மங்களதீர்த்த பூங்கா

மங்கள தீர்த்த பூங்கா

மங்கள தீர்த்த பூங்கா

Ramanathapuram : இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தை அடுத்துள்ள தங்கச்சிமடத்தில் தேசிய நெடுஞ்சாலை அருகில் இருக்கிறது மங்கள தீர்த்த பூங்கா.

    ராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் அடுத்துள்ள தங்கச்சிமடத்தில் தேசிய நெடுஞ்சாலை அருகில் மங்கள தீர்த்த பூங்கா உள்ளது. பல மாதங்களாக திறக்காமலும் பராமரிப்பு இல்லாமல் சிதிலமடைந்து உள்ளது.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்:-

    இரண்டு வருடங்களுக்கு முன் இப்பூங்கா திறக்கப்பட்டது. பின்பு முதலில் போடப்பட்ட ஊரடங்கால் இப்பூங்கா நகராட்சி அதிகாரிகளால் பூட்டப்பட்டது.

    அதன்பிறகு, இரவு நேரத்தில் இங்கு சிலர் மது அருந்துதல் போன்ற செயல்களை செய்தனர். பின்பு, அங்குள்ள பொருட்களையும் உடைத்து விட்டனர்.

    குழந்தைகள் இங்கு விளையாட செல்ல ஆசைப்படுகின்றனர். இதை முறையாக பராமரித்து மீண்டும் திறக்கப்பட்டால் குழந்தைகள் விளையாடவும் பெரியவர்கள் நடைபயிற்சி மேற்கொள்ளவும் பயனுள்ளதாகவும் இருக்கும் என்று கூறினர்.

    செய்தியாளர்:பூ.மனோஜ்குமார், இராமநாதபுரம்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Ramanathapuram

    அடுத்த செய்தி