மண்டபம் அருகே உள்ள குஞ்சாரவலசை கிராமத்தில் ஓடையில் அறுந்து கிடந்த மின்சார கம்பியால் மூன்று மாடுகள் சம்பவ இடத்திலேயே மின்சாரம் பாய்ந்த பலியாகின.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று, காலை கடுமையான காற்று மற்றும் மழை பெய்து ராமேஸ்வரம் ,மண்டபம், உச்சிப்புளி ,பாம்பன் ஆகிய பகுதிகளில் வெள்ள நீர் வழிந்தோடி வருகிறது.
இந்நிலையில், மண்டபத்தை அடுத்த குஞ்சார்வலசை பேருந்து நிலையத்தில் அடித்த பலத்த காற்றால் அருகில் இருந்த மின் மின்கம்பத்தில் இருந்து மின்சார கம்பி அருகில் இருந்த ஓடையில் அருந்து விழுந்துள்ளது.
இதையாரும் கவனிக்காத வேலையில் மூன்று மாடுகள் மின்சாரக் கம்பி அறுந்து விழுந்த தண்ணீரில் இறங்கியதால் 3 மாடுகளின் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியாயின.
மாடுகள் இறந்து கிடந்ததைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் மின்சார வாரியத்திற்கு தகவல் தெரிவித்த பின்பு மின்சார வாரிய பணியாட்கள் விரைந்து வந்து மின்சாரத்தை நிறுத்தினர்.
அப்பகுதியை சேர்ந்த கோட்டையப்பன் என்பவரது இரண்டு பசு மாடுகள் உயிரிழந்தன. பொன்னுச்சாமி என்பவரது ஒரு பசு மாடும் உயிரிழந்தது. 3 பசுமாடுகளுக்கும் உரிய இழப்பீடு உடனே கிடைக்க வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்து வேதனை தெரிவித்துள்ளனர்.
மின்சார கம்பி அறுந்துவிழுந்த நேரத்தில் மனித நடமாட்டம் அங்கு இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் பலி சம்பவம் ஏதும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.