Home /local-news /

பிரதோஷம் : 23 அடி நந்தி சிலைக்கு மஹாதீபாராதனை

பிரதோஷம் : 23 அடி நந்தி சிலைக்கு மஹாதீபாராதனை

பிரதோஷம்

பிரதோஷம் 23 அடி நந்தி சிலைக்கு மஹாதீபாரதனை

Rameswaram : பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தி பகவானை வழிபட்டனர்.

    பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு நந்தி பகவானை வழிபட்டு சென்றனர்.

    உலகப் பிரசித்தி பெற்ற இராமேஸ்வரம் அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயிலில் பங்குனி மாதபிரதோஷத்தை முன்னிட்டு இராமநாதசுவாமி சன்னதிக்கு முன்னர் அமைந்துள்ள நந்தி சிலைக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

    இந்த நந்தி சிலையானது 23 அடி நீளம், 12 அடி அகலம், 17 அடி உயரம் கொண்ட பெரிய நந்தியாகும். விசேஷ நாட்களில் இந்த நந்திபகவானுக்குவேத விற்பனர்கள் மந்திரங்கள் முழங்க சிறப்புமஹா தீபாராதனை நடத்தப்படும், அதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று நந்தி பகவானை வழிபடுவர்.

    மாதந்தோறும் வரும் பிரதோஷத்தன்று, இந்த நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெறுவது வழக்கம். அதன்படி, பங்குனி மாதமகா பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிவச்சாரியர்கள் மந்திரங்கள் முழங்க சிறப்பு தீபாரதனை நடைபெற்றது.

    இதில், ஏராளமான பக்தர்கள் வரிசையில் அமர்ந்து, நந்தியம்பெருமானை வழிப்பட்டனர். மேலும் நந்தியம்பெருமானுக்கு அலங்காரம் செய்தும் மகாதீபாராதனை நடைபெற்றது.

    முன்னதாக ஸ்ரீபதிநாயக்கர் சந்திரசேகர் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, மேளதாளங்கள் முழங்க மூன்றாம் பிரகாரத்தை சுற்றி வந்தார். அதனைத் தொடர்ந்து ராமநாத சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Ramanathapuram, Temple

    அடுத்த செய்தி