முந்நூறு ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்த பாரம்பரியமிக்க ஆலடி கருப்பண்ணசாமி கோவிலில் மகாகும்பாபிஷேகம் சிறப்பாக நடந்து முடிந்தது.
ராமேஸ்வரம் உள்ள லெட்சுமண தீர்த்தத்தின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ஆலடி கருப்பணசாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அங்கே, குடமுழுக்கு திருவிழா சிறப்பாக நடைபெற்ற பின்னர், ஆலடி கருப்பசாமி கோவிலில் உள்ள கருப்பண சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து, கோ பூஜை, கஜ பூஜை, வாஸ்து சாந்தி பூஜை, கால பூஜை, ஸ்பர்ஷாஹூதி, நைலோன் மீலனம், 108 திரவியாஹூதி, மஹா பூர்ணாஹூதி மற்றும் மஹா பூர்ணாகுதி ஆகிய பூஜைகள் நடைபெற்றன.
சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க தலையில் சுமந்து வந்த புனித நீரை கோவில் கலசங்கள் மீது ஊற்றப்பட்டது. பின்பு புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் இராமேஸ்வரத்தை சுற்றியுள்ள ஏராளமான பொதுமக்கள் மற்றும் வெளியூர் மக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.