Home /local-news /

காங்கேயன் நாட்டு மாடுகளை வளர்க்கும் பொறியியல் பட்டதாரி

காங்கேயன் நாட்டு மாடுகளை வளர்க்கும் பொறியியல் பட்டதாரி

காங்கேயன்

காங்கேயன் நாட்டு மாடுகளை வளர்க்கும் பொறியியல் பட்டதாரி

உத்திரப்பிரதேசத்தில் பொறியாளராக பணியாற்றிய கேதர்நாத், ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது ஏற்பட்ட தாக்கத்தால் சொந்த ஊரிற்கு வந்து நாட்டு மாடுகள் மற்றும் அழிந்து வரும் மாட்டு இனங்களை வளர்த்து வருகிறார்.

    காங்கேயன் போன்ற நாட்டு மாடுகள் அழிந்து வரும் நிலையில், இராமேஸ்வரத்தை சேர்ந்த பொறியியல் பட்டதாரி இளைஞர் கேதர்நாத் மற்றும் அவரது மனைவி இருவரும் சேர்ந்து மாடுகளை பாதுகாத்தும், பராமரித்தும் வருகின்றனர்.

    உத்திரப்பிரதேசத்தில் பொறியாளராக பணியாற்றிய கேதர்நாத், ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது ஏற்பட்ட தாக்கத்தால் சொந்த ஊரிற்கு வந்து நாட்டு மாடுகள் மற்றும் அழிந்து வரும் மாட்டு இனங்களை வளர்த்து வருகிறார்.

    இதுகுறித்து கேதார்நாத் கூறியதாவது:-

    இந்தியாவில் மொத்தம் 80 வகைக்கும் மேற்பட்ட நாட்டுமாடுகள் இருந்தன. ஆனால், தற்போது 6 வகையான நாட்டு இனமாடுகள் மட்டுமே உள்ளது, வருத்தத்தை அளிக்கிறது.

    சில வருடங்களுக்கு முன்பு இராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரவையில் இருந்து கோயம்புத்தூரில் தனியார் ஸ்வீட் நிறுவனத்திற்கு கரவை மாடுகளின் பால்கள் மூலம் பால்கோவா மற்றும் இனிப்பு பொருட்கள் தயாரிக்க ஏற்றுமதி செய்யப்பட்டது. ஆனால் தற்போது அவைகள் முற்றிலும் அழிந்துவிட்டன.

    வடஇந்தியாவில் மட்டுமே காங்கரஜ், கிர், சாகிவால், இராட்டி, இரக்சந்தி போன்ற கரவை இனமாடுகள் உள்ளன. தென்னிந்திய பகுதிகளில் அவற்றை வளர்ப்பது இல்லை.

    காங்கேயன் வகை மாடுகள் எந்த ஒரு சூழலுக்கு மாறும் தன்மை உடையது. வைக்கோல், தவுடு போன்றவற்றை கொடுத்தாலே நன்கு வளரக்கூடியது. சுமார் 20 முதல் 25 ஆண்டுகள் வாழக்கூடியவை.

    காங்கரஜ் வகை மாடுகள் உருவம் பெரியதாகவும், கொம்புகள் நீலமாகவும், முரட்டுத்தனமாகவும் உள்ளதால் இந்தவகை மாடுகளை வளர்க்க யாரும் முன்வருவதில்லை, இவைகள் உருவம்தான் பெரியதாக இருக்கும். ஆனால் இவைகளின் குணங்கள் குழந்தையை போல் தன்மையுடையது.

    தினமும் மாடுகளுக்கு உணவளிக்க ஒவ்வொரு மாட்டிற்கும் ரூ.300 வரை செலவு ஆகும். செலவுகளை விட இதில் லாபம் அதிகம் வரும். அனைவரது வீடுகளிலும் மாடுகளை வளர்க்க வேண்டும், இதனால் நாட்டு மாடுகளை அழிவில் இருந்து காக்கலாம். அதன்மூலம் கிடைக்கும் சுத்தமான பாலை அருந்துவதால் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும் என்றார்.

    செய்தியாளர்:பூ.மனோஜ்குமார், இராமநாதபுரம்.
    Published by:Vijay R
    First published:

    Tags: Ramanathapuram

    அடுத்த செய்தி