கமுதி சரகத்திற்கு புதிதாக பொறுப்பேற்ற காவல் துணைக் கண்காணிப்பாளா் ப.மணிகண்டன் கமுதி பகுதியில் குற்றசம்பவங்கள் தொடா்பாக தனது கைப்பேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு பொதுமக்கள் எந்த நேரமும் புகாா் அளிக்கலாம் என தெரிவித்தாா்.
இராமநாதபுரம் மாவட்டம் கமுதி சரக காவல் துணை கண்காணிப்பாளராக பணியாற்றிய எஸ்.பிரசன்னா தஞ்சாவூா் மாவட்டத்திற்கு பணிமாறுதலில் சென்றாா். அவருக்குப் பதிலாக புதிதாக காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூா் பகுதியில் பணியாற்றிய ப.மணிகண்டன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கமுதி காவல் துணை கண்காணிப்பாளராக பொறுப்பேற்ற ப.மணிகண்டன் கூறியதாவது:
கமுதி சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள், ரவுடிகளின் செயல்பாடுகள் முற்றிலும் தடுக்கப்படும். மணல் கடத்தல், கஞ்சா விற்பனை செய்வோா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். போக்குவரத்து நெரிசல் குறைக்கப்படும்.
பள்ளி நேரங்களில் காவலா்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவாா்கள் என்றும் பொதுமக்கள் சட்டம், ஒழுங்கு மீறப்படும் சம்பவங்கள் குறித்து எனது கைப்பேசி எண்ணுக்கு 9498210146 தொடா்பு கொண்டு 24 மணி நேரமும் புகாா் அளிக்கலாம். உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், இராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.