ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பேரூராட்சியில் மொத்தமாக 15-வார்டுகள் உள்ளன. இதில், 11-வார்டுகளில் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 2,3,6 மற்றும் 9-வது வார்டுகளில் மட்டும் தேர்தல் நடைபெற உள்ளது.
1-வது வார்டில் மீனாட்சி,
4-வது வார்டு தேவி,
5-வது வார்டில் உத்தண்ட சுரேஷ்,
7-வது வார்டில் அப்துல் வஹாப்சகாராணி,
8-வது வார்டில் கனிமலர்,
10-வது வார்டில் அந்தோணி சவேரியார் அடிமை,
11-வது வார்டு சேக்முகமது,
2-வது வார்டில் ஹமீதுமீராள் கவுசர்,
13-வது வார்டில் சித்ரா,
15-வது வார்டில் திருக்கம்மாள்,
14-வது வார்டில் பா.ஜ.க வேட்பாளர் சத்யா ஜோதிராஜா ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
வார்டு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர்களில் ஒருவர் மட்டும் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர். மற்ற 10 நபர்களும் சுயேட்சை வேட்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்:பூ.மனோஜ்குமார், இராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.