ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பம்மனேந்தல் கிராமத்தில் உள்ள கழுகூரணி முனியப்பசாமி கோவில் மாசிக்களரி திருவிழாவை முன்னிட்டு இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் எருதுகட்டு விழா நடைபெற்றது.
எருதுகட்டு விழாவை முன்னிட்டு பம்மனேந்தல் கிராம ஊரணியில் நீர் வற்றியதால் ஊரணியை மைதானம் ஆக்கி நடுவில் உரல் புதைத்து அதில் வடம் கட்டி ஒவ்வொரு மாடாக மைதானத்தில் கயிறு கட்டி அவிழ்க்கப்பட்டது.
இப்போட்டியில், 15 காளைகள் கலந்து கொண்டன. ஒவ்வொரு காளையை அடக்க 25 நிமிடங்கள் ஒதுக்கபட்டன.இந்த காளைகளை அடக்க 9 வீரர்கள் அடங்கிய மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.
இந்த வடமாடு எருதுகட்டு விழாவிற்கு கமுதி சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் மதுரை. விருதுநகர், சிவகங்கை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து காளைகள் கொண்டு வரப்பட்டு போட்டியில் பங்கேற்கப்பட்டது.
எருது கட்டு விழாவை பெண்கள், கமுதி சுற்றுவட்டாரத்தில் உள்ள சிறுவர்கள்,முதியோர், பெரியவர்கள் உள்ளிட்ட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர். வெற்றி பெற்ற காளை மற்றும் மாடு பிடி வீரர்களுக்கு பரிசுகள் வழங்க பட்டது.
மாடுபிடி வீரர்களுக்கு காயம் ஏற்பட்டால் முதலுதவி சிகிச்சை செய்ய மருத்துவகுழு மற்றும் தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் இருந்தனர்.
செய்தியாளர்: பூ. மனோஜ்குமார், ராமநாதபுரம்
உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.