Home /local-news /

‘ஜெய்பீம்’ புகழ் தமிழ் இயக்கத்தில் வெளியாகும் டாணாக்காரன்.. கொண்டாடும் ராமேஸ்வரம் மக்கள்..

‘ஜெய்பீம்’ புகழ் தமிழ் இயக்கத்தில் வெளியாகும் டாணாக்காரன்.. கொண்டாடும் ராமேஸ்வரம் மக்கள்..

‘டாணாகாரன்’ இயக்குனர் தமிழை வாழ்த்தி போஸ்டர்கள்

‘டாணாகாரன்’ இயக்குனர் தமிழை வாழ்த்தி போஸ்டர்கள்

Jai Bhim Fame Tamilarasan | இயக்குனர் தமிழ் இயக்கிய டாணாக்காரன் திரைப்படம் நாளை ஏப்ரல்-8ம் தேதி Disney Hotstar OTT-ல் வெளியாவதை ஒட்டி  அவரை பாராட்டி  திரைப்படம் வெள்ளி விழா வாழ்த்து

    ‘ஜெய்பீம்’ படம் மூலம் புகழ்பெற்ற இயக்குனர் தமிழ் இயக்கிய டாணாக்காரன் திரைப்படம் நாளை  ஏப்ரல்-8ம் தேதி Disney Hotstar OTT-ல் வெளியாவதை ஒட்டி அவரை பாராட்டி திரைப்படம் வெள்ளி விழா காண சிறுவயதில் இருந்து பழகிய அவரின் நண்பர்கள் ராமேஸ்வரத்தில் கட் அவுட் பேனர்கள், போஸ்டர்கள் வைத்துள்ளனர்.

    அறிமுக இயக்குநர் தமிழ், இயக்குநர் வெற்றிமாறனிடம் விசாரணை,வடசென்னை, அசுரன், விடுதலை, உள்ளிட்ட படங்களில் இணை இயக்குநராகப் பணிபுரிந்துள்ளார்.அசுரன் படத்தில் வில்லனாகவும், ஜெய்பீம் திரைப்படத்தில் முக்கிய வில்லனாகவும் நடித்துள்ளார்.

    இதையடுத்து, டாணாக்காரன் தரைப்படத்தை இயக்கியுள்ளார். நடிகர் விக்ரம் பிரபு இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.விக்ரம் பிரபுவுக்கு கதாநாயகியாக மலையாள நடிகை அஞ்சலி நாயர் நடித்துள்ளார். இப்படத்தை பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

    Director Raja


    மேலும் இப்படத்தில் லால், எம்.எஸ்.பாஸ்கர், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இயக்குனர் தமிழரசன் என்கிற ராஜா சின்னஞ்சிறிய தீவான ராமேஸ்வரத்தை சேர்ந்தவர். உள்ளூர் நபரான இவர் புகழப்படும் திரைப்பிரபலமாக மாறியதில் உள்ளூர்வாசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில், ராமேஸ்வரத்தில் சிறு வயதிலிருந்தே இயக்குநர் ராஜா உடன் பழகிய நண்பர்கள், அவரின் புதிய ‘டாணாக்காரன்’ படம் வெள்ளிவிழா காண அவரை வாழ்த்தி ராமேஸ்வரத்தின் முக்கிய பகுதிகளில் ஃப்ளக்ஸ் பேனர்கள் வைத்துள்ளனர்.

    செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
    Published by:Arun
    First published:

    Tags: Ramanathapuram, Rameshwaram

    அடுத்த செய்தி