Home /local-news /

இராமேஸ்வரம்: மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படும்  முக்கிய இடங்கள்

இராமேஸ்வரம்: மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படும்  முக்கிய இடங்கள்

முழு

முழு நேர ஊரடங்கு காரணமாக  பரபரப்பாக காணப்படக் கூடிய இராமநாதசுவாமி கோவில் மற்றும் தனுஷ்கோடி   வெறிச்சோடி காணப்படுகிறது.

முழு நேர ஊரடங்கு காரணமாக  பரபரப்பாக காணப்படக் கூடிய இராமநாதசுவாமி கோவில் மற்றும் தனுஷ்கோடி   வெறிச்சோடி காணப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    முழு நேர ஊரடங்கு காரணமாக பரபரப்பாக காணப்படக் கூடிய இராமநாதசுவாமி கோவில் மற்றும் தனுஷ்கோடி வெறிச்சோடி காணப்படுகிறது.

    தமிழகத்தில் தொடர்ந்து உயர்ந்து வரும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிகையை கட்டுபடுத்தும் விதமாக, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது.

    இதன் காரணமாக எப்போதும் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களுடன் பரபரப்பாக காணப்பட கூடிய அக்னி தீர்த்த கடற்கரை, திருக்கோவில் நான்கு ரத வீதிகள், தனுஷ்கோடி கடற்கரை, மற்றும் ராமேஸ்வரம் தீவு பகுதி முழுவதும் மக்கள் மற்றும் வாகனங்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

    தேவையில்லாமல் சாலைகளில் சுற்றித் திரியும் நபர்களை மட்டும் வாகனங்களை தடுத்து நிறுத்தி காவல்துறையினர் அவர்களை எச்சரித்து அனுப்பி வருகின்றனர்.

    பொதுவாக வார விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் ராமேஸ்வரத்தில் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆயிரகணக்கானோர் வருகை தருவதால் கூட்ட நெரிசல் அதிகமாக காணப்படும். ஆனால் தற்போது தடையின் காரணமாக ராமேஸ்வரம் களையிழந்து காணப்படுகிறது.

    செய்தியாளர்:பூ. மனோஜ்குமார், இராமநாதபுரம்
    Published by:Vijay R
    First published:

    அடுத்த செய்தி