நுகர்வோர் பாதுகாப்பு துறையில் சிறந்து விளங்கிய உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் மாவட்ட அளவிலான தேசிய மற்றும் நுகர்வோர் உரிமைகள் தின விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சங்கர்லால் குமாவத் கலந்துகொண்டு, ராமநாதபுரத்தில் நுகர்வோர் பாதுகாப்பு துறையில் சிறந்து விளங்கிய மாணவ மாணவியர்கள், அலுவலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு பரிசுகளை வழங்கி கவுரவித்தார்.
மேலும், மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கீழ் கலந்துகொண்ட அனைவரின் முன்னிலையில், ஆட்சித் தலைவர் உணவு பாதுகாப்பு தலைப்பின்கீழ் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், உணவு பாதுகாப்பு துறை அலுவலர் டாக்டர் விஜயகுமார் மற்றும் அலுவலர்கள் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
மேலும், நமது வீடுகளில் அன்றாடம் பயன்படுத்தப்படும் உணவுப்பொருட்களில் கலப்படம் ஏதேனும் உள்ளதா என்பதை எளிய முறையில் கண்டறியும் (DART) வழிமுறைகள் பற்றி உணவுப் பாதுகாப்பு துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு விளக்கப்பட்டது.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(Ramanathapuram)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.