இலட்சுமணர் தீர்த்தமானது ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள தீர்த்தங்களில் மிக முக்கிய தீர்த்தங்களில் ஒன்றாகும்.ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் இங்கு கட்டாயம் வந்து செல்வார்கள்.
இந்த தீர்த்தமானது சீதையை கடத்தி சென்ற இராவணனை வதம் செய்து தனக்கு ஏற்பட்ட பாவங்கள் போக்குவதற்காக ராமர் தம்பி இலட்சுமனரால் உருவாக்கப்பட்டது, என்று இராமாயணம் வரலாற்றில் கூறப்பட்டுள்ளது.
இராமேஸ்வரத்தில் உள்ள முக்கிய தீர்த்த குளங்களில் இந்த தீர்த்த குளமும் ஒன்றாகும். இராமேஸ்வரத்தை சுற்றி சுமார் 64 புனிததீர்த்த குளங்கள் உள்ளன. இவற்றில் சில அழிந்து கொண்டும் வருகின்றன.
அவற்றில் 22 புனித தீர்த்தங்கள் அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோவிலில் உள்ள வளாகத்தை சுற்றி அமைந்துள்ளன. தைப்பூசம் அன்று இந்த தீர்த்த குளத்தில் தேர்சுற்றும் நிகழ்வு நடைபெறும், அப்போது உள்ளூர் மக்களின் வெள்ளத்தில் காணப்படும்
இந்த தீர்த்தமானது இராமநாதசுவாமி கோவிலில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இடதுபக்கம் அமைந்துள்ளது. இதன் எதிரே சீதா தீர்த்தமும், பஞ்சமுகி ஆஞ்சநேயர் கோவிலும் தண்ணீரில் கல் மிதக்கும் இடங்கள் அமைந்துள்ளன.
இலட்சுமண தீர்த்தம் இலட்சுமனேஸ்வரர் பெயரில் சிவன் இருக்கும் கோவில் உள்ளது. கோவிலில் பக்தர்கள் வழிபட்டு தீர்த்தநீரை தலையில் தெளித்து செல்வார்கள். குளத்தில் உள்ள மீன்களுக்கு பொறி, அரிசி இரையாக வழங்கி புண்ணியம் தேடுவது ஐதீகம்.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(Ramanathapuram)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.