'Mohabeer Dharmasala' என்கிற ராணி மங்கம்மாள் சத்திரமானது ராமேஸ்வரம் ரயில் நிலையம் எதிரே அமைந்துள்ளது.
ராமேஸ்வரத்திற்கு ராணி மங்கம்மாள் வந்து தங்கிய இடத்தில் அவரது நினைவாக அவர்களது இரண்டாம் மற்றும் மூன்றாம் தலைமுறை வாரிசுகளால் கட்டப்பட்டது இந்த சத்திரம் ஆகும்.
ராணிமங்கம்மாள் 1689 முதல் 1704 வரை மதுரையை ஆண்ட பெண்மணி ஆவார். மதுரையை ஆண்ட சொக்கநாத நாயக்கரின் மனைவி ஆவார். 18-ம் நூற்றாண்டு காலத்தில் தென்னாட்டை தனியே ஆண்ட பெண்ணரசி. இவருடைய ஆட்சி காலத்தில் மதுரை நாயக்கர்களின் தலைநகரமாக திருச்சிராப்பள்ளி விளங்கியது.
ராணி மங்கம்மாளின் பெயரில் பல இடங்களில் சத்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மதுரையில் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வரும் வடமாநில பக்தர்கள் தங்குவதற்காக கட்டப்பட்டது. பின்பு ராமநாதபுரத்தை ஆண்ட சேதுபதி மன்னரிடம் இந்த சத்திரமானது இருந்துள்ளது. இதில் சாரதாதேவியார் வந்து மூன்று நாட்கள் தங்கி உள்ளார்.
சாரதாதேவி அம்மையார் தங்கியிருந்தபோது சேதுபதி மன்னர் 108 பூக்கள் வைத்து பரிசாக வழங்கியுள்ளார்.இதை ராமநாதசுவாமி கோவிலில் உள்ள ராமநாதருக்கு காணிக்கையாக வைத்து பூஜை செய்துள்ளார்.
கிரீன் ராமேஸ்வரம் என்ற அமைப்பு தனது சொந்த செலவில் பழமை மாறாமல் ரூ.1.70 கோடி செலவில் இதை புதுப்பித்து தற்போது பாதுகாத்து பராமரித்து வருகிறது.
இதற்கு முன்பு இந்த சத்திரமானது சித்த வைத்திய மையமாகவும், அதன்பின் குஜராத்தை சேர்ந்தவர்கள் நடத்தி வந்ததால் மொகபீர் தர்மசாலா என்ற பெயரில் இயங்கி வருகிறது.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.