ராமேஸ்வரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல், போதிய காவல்துறையினர் இல்லாததால் போக்குவரத்தை நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினர் திணறினர்.
ராமேஸ்வரம் சுற்றுலா தளம் மற்றும் ஆன்மீக ஸ்தலம் என்பதால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அதேபோல, விடுமுறை மற்றும் திருவிழாக்காலங்களில் பல்லாயிரக்கணக்கான வரும் ராமேஸ்வரம் வருவது, வழக்கமாக இருந்து வருகிறது,
ராமேஸ்வரம் வருபவர்கள், ரயில்கள், பேருந்து, தங்கள் சொந்த வாகனங்களில், இங்கு வருகை புரிந்து, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, ராமேஸ்வரம் பகுதியைச் சுற்றியுள்ள சுற்றுலா ஸ்தலங்களான, ராமர் பாதம், தனுஷ்கோடி, பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றி செல்வது வழக்கமாக இருந்து வருகிறது,
இன்று அம்மாவாசை மற்றும் வார இறுதி நாட்களாக இருப்பதால் ஆயிரக்கணக்கான வாகனங்கள் ராமேஸ்வரம் பகுதியில் குவிய தொடங்கியது, ராமேஸ்வரம் பகுதியில் வாகனங்கள் நிறுத்த போதுமான பார்க்கிங் வசதி, இல்லாத காரணத்தினாலும், அதேபோல வாகனங்களை கட்டுப்படுத்த போதிய போக்குவரத்து காவல்துறையினர் இல்லாததாலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது,
ஆங்காங்கே வாகனங்களை சாலையோரங்களில் இரு பகுதியிலும் நிறுத்தி வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது, இதனால் வழக்கம்போல் வேலைக்கு செல்லும் உள்ளூர் பொதுமக்கள், மற்றும் பள்ளி கல்லூரி மாணவ மாணவியர், அலுவலகங்கள் மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு செல்வதில் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர்,
மேலும் ஈஸ்வரி அம்மன் கோவில் பகுதியில் அமைந்துள்ள நகராட்சிக்கு சொந்தமான கார் பார்க்கிங் வாகனங்கள் நிறுத்த அமைக்கப்பட்டது, ஆனால் கார் பார்க்கிங் மட்டுமே அமைத்த நகராட்சி நிர்வாகம் வாகனங்கள் செல்வதற்கு போதிய சாலை வசதி போடாததால் வாகனங்கள் மண்ணுக்குள் புதைந்து வானத்தை மீட்க முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிபட்டு வருகின்றனர்,
இதையடுத்து, மாவட்ட நிர்வாகம் மாநகராட்சி நிர்வாகம் இணைந்து ராமேஸ்வரம் வரும் சுற்றுலா பயணிகளுக்கு வாகனங்களை நிறுத்த போதுமான கார் பார்க்கிங் வசதி செய்து கொடுக்க வேண்டும், அதேபோல போக்குவரத்தை சீர் செய்ய போதுமான போக்குவரத்து காவல் துறையினரை நியமிக்க வேண்டும் எனவும் ராமேஸ்வரம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(Ramanathapuram)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.