பரமக்குடியில் 20 லட்சம் மதிப்புள்ள குட்கா மூட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் தடைசெய்யப்பட்ட குட்கா புகையிலை பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் ராமநாதபுரம் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணி அளவில் குற்றப்பிரிவு போலீசார் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு ஈச்சர் லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். அந்த வாகனத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 54 மூட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு சுமார் 20 லட்சம் என கூறப்படுகிறது.
லாரியை பறிமுதல் செய்த போலீசார் லாரியை ஓட்டி வந்த ஓட்டுனர் மற்றும் குட்கா புகையிலை விற்பனை செய்த ராமஜெயம் ஆகியோரை கைது செய்து நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். கைதான நபர்களிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.