Home /local-news /

துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாம்பன் பாலத்தில் பாதுகாப்பு

துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாம்பன் பாலத்தில் பாதுகாப்பு

Rameswaram

Rameswaram News | குடியரசு தினத்தை முன்னிட்டு பாம்பன் ரயில் பாலத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Rameswaram News | குடியரசு தினத்தை முன்னிட்டு பாம்பன் ரயில் பாலத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    குடியரசு தினத்தை முன்னிட்டு பாம்பன் ரயில் பாலத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கோயில், கடற்கரையிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    நாடு முழுவதும் வரும் 26ம் தேதி நாட்டின் 77வது குடியரசு தின விழா கொண்டாப்பட உள்ளது, இந்த நிலையில், தீவிரவாத அச்சுறுதல் இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இராமேஸ்வரம் இராமநாதசாமி கோயில், பாம்பன் ரயில் பாலம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    பாம்பன் ரயில் பாலத்தில் ஆயுதம் தாங்கிய காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருவதுடன், வெடிகுண்டு தடுப்பு மெட்டல் டிடெக்டர் கருவிகளை கொண்டு பாலம் முழுவதும் கண்காணித்து வருகின்றனர். அதே போல, பாம்பன் ரயில் பாலத்தில் பொதுமக்கள், மீனவர்கள் வருகை குறித்தும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், இராமநாதபுரம்.
    Published by:Vijay R
    First published:

    Tags: Ramanathapuram

    அடுத்த செய்தி