மூதாட்டி கொலை வழக்கில் தனிப்படை அமைக்கப்பட்டு இரண்டு குற்றவாளிகளை திருவாடானை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள ஆயிரவேலி கிராமத்தை சேர்ந்த பூங்கோதை எனும் மூதாட்டியை கடந்த பிப்ரவரி 23-ம் தேதி வீட்டில் தனியாக இருந்த போது அவரை கொலை செய்து வீட்டில் இருந்த உண்டியலைஉடைத்து பணத்தை திருடிவிட்டு சென்றனர்.
பட்டப்பகலில் நடந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் காவல்துறையினரால் தனிப்படை அமைக்கப்பட்டது
இதையடுத்து, திருவாடானை காவல்துறையினர் டி.எஸ்.பி.ஜான்பிரிட்டோ, இன்ஸ்பெக்டர் ஸ்ரீநிவாசகன் தலைமையில் தனிப்படையினர் கொலை செய்தவர்களை தேடிப் பிடித்தனர்.
கைதான இருநபர்கள் திருவாடானை சேர்ந்த ஆதிரெத்தினேஸ்வரன் வயது20, மேல்பனையூரை சேர்ந்த கலைமணி வயது 32 .
மதுவாங்க பணம் இல்லாததால் மூதாட்டியின் வீட்டில் திருட முயன்றோம், அப்போது மூதாட்டி பூங்கோதை சத்தம் போட்டு கத்தியதால், அவரின் தலையை பிடித்து சுவற்றில் மோதி பின், கம்பால் தலையில் தாக்கியதில் அவர் இறந்துவிட்டார் என்று கைதான ஆதிரெத்தினேஸ்வரன் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், இராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.