தில்லை நாச்சி அம்மன் குடியிருப்பில் அமைந்துள்ள தில்லை நாச்சியம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இதில் அப்பகுதி மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் பெற்று சென்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் உச்சிப்புளி அடுத்த தில்லை நாச்சியம்மன் குடியிருப்பில் அமைந்துள்ள தில்லை நாச்சியம்மன் பூச்சொரிதல் விழா காப்பு கட்டப்பட்டு தொடர்ந்து பத்து நாட்கள் அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அப்பகுதியில் ஊர்வலம் நடைபெற்றது.
இதையடுத்து, நான்காம் ஆண்டு பூச்செரிதல் விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனுக்கு பூந்தட்டு ஏந்தி சென்றனர்.
சுந்தரமுடையான் அருகே உள்ள குத்துக்கள் முனீஸ்வர் கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, திரும்பிய ஊர்வலம் தில்லை நாச்சியம்மன் கோவிலுக்கு சென்று அடைந்தபின் தில்லை நாச்சியம்மனுக்கு வகை வகையான பூவினால் அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர் தில்லை நாச்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இவ்விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு பூந்தட்டு ஏந்தி தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர்.
மேலும், கோவில் நிர்வாகம் சார்பில் அங்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் பிரசாதம் வழங்கப்பட்டது.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(Ramanathapuram)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.