ராமேஸ்வரம் சுற்றுலா தளங்களில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடையால் வனத்துறையினர் சுற்றுலா வாகனங்களில் சோதனை செய்து விழிப்புணர்வு செய்து மஞ்சள் பைகளை வழங்கினர்.
ராமேஸ்வரம், தனுஷ்கோடி, அரிச்சல்முனை, பாம்பன் ஆகிய சுற்றுலா தளங்களில் சுற்றுலாப் பயணிகள் பாலித்தீன் பயன்படுத்துவது கடற்கரை ஓரங்களில் வீசி செல்வதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
இதைத்தொடர்ந்து வன உயிரின கோட்டம் மண்டபம் வனச்சரகர் செந்தில்குமார் தலைமையில் இன்று ராமேஸ்வரம் தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் வனத்துறை அதிகாரிகள் வனவர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சுற்றுலா வாகனங்களை நிறுத்தி சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு செய்தனர்.
கடற்கரை ஓரங்களில் பிளாஸ்டிக் பைகளை விட்டுச் செல்வதை தவிர்க்கவும் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் அறிவுரை வழங்கினர்.
மேலும் வாகனங்களில் சுற்றுலாப்பயணிகள் கொண்டுசென்ற பாலித்தீன் பைகளை அகற்றி அதற்கு பதிலாக மஞ்சப்பை கொடுத்து அனுப்பினர்.
மேலும் தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் கழிவு குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.