தொழில் வீழ்ச்சி காரணமாக ராமேஸ்வரத்தில் வழங்கப்பட்ட ஆழ்கடல் மீன்பிடி படகுகளுக்கான,வங்கிக் கடனை ரத்து செய்ய வேண்டும் என்று ராமேஸ்வரம் துறைமுகத்தில் மீனவ சங்க ஆலோசனை கூட்டத்தில் கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது.
மத்திய அரசு சார்பில் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் துவங்கப்பட்ட ஆழ்கடல் மீன்பிடி திட்டம் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், பகுதி மீனவர்களுக்கு பயனற்ற திட்டமாக உள்ளது. என்றும், நெருக்கடியான நேரங்களில் படகுகளை இயக்க முடியாமலும் வங்கிக்கடனை செலுத்த முடியாமலும் ஆழ்கடல் மீன்பிடி படகுகள் பெற்ற மீனவர்களின் குடும்பங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக இருக்கிறது.
மேலும்,ஆழ்கடல் மீன் பிடிப்புக்கு செல்லும் மீனவர்கள் ஒருமுறை சென்று வர 2,000 முதல் 3,000 லிட்டர் வரை டீசல்செலவாகிறது. டீசல் விலை நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே இருக்க ஆழ்கடல் மீன்பிடி படகுகளை மீனவர்கள் இயக்க முடியாத சூழ்நிலை நிலவுகின்றது.
இந்நிலையில், வங்கியில் வாங்கிய கடனை செலுத்த முடியாமலும் மேலும் வெளியில் பெற்ற கடனை செலுத்த முடியாமலும் மிகுந்த சிரமத்துடன் மீனவர்கள் இருக்கின்றனர்.
மேலும், ஆழ்கடல் படகினை வைத்து தொழில் செய்வதற்கு தேவையான முறையான துறைமுகம் ராமேஸ்வரம் தீவு பகுதியில் இல்லாத காரணத்தால் வெளிமாநிலங்களுக்கு படகுகளை கொண்டு செல்லக் கூடிய சூழல்உள்ளது.
மத்திய மாநில அரசுகள் ராமேஸ்வரம் தீவு பகுதியில் 31 ஆழ்கடல் மீன்பிடிபடகுகளுக்கு வழங்கிய ரூ.16 லட்சம் வங்கிக் கடனை ரத்து செய்ய வேண்டும். என்ற, கோரிக்கையைவலியுறுத்தி ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இன்று மீனவர் சங்க அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மேலும் வருகின்ற 22 ஆம் தேதி சென்னைக்கு சென்று மீன்வளத்துறை அமைச்சரிடம் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் கூறினர்.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(Ramanathapuram)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.