இராமேஸ்வரம், பர்வதவர்த்தினி அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையத்தில் இன்று தேசிய வாக்காளர் தின உறுதிமொழி இராமேஸ்வரம் வட்டாட்சியர் தலைமையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வட்டாட்சியர் தலைமையில் புதிய வாக்காளர்கள்களுக்கு வாக்காளர் அடையாள அட்டையும் வழங்கப்பட்டது.
நாடு முழுவதும் இன்று தேசிய வாக்காளர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் புதிய வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து உறுதிமொழியாக :-
மக்களாட்சியின் மீது பற்றுடைய இந்திய குடிமக்களாகிய நாம் நம்முடைய நலம் கருதும் மரபுகளையும் சுதந்திரமான நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் மாண்பையும் நிலை நிறுத்துவோம் என்றும் மேலும் ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றியும் மதம், இனம், சாதி, வகுப்பு, மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும் அல்லது எந்த ஒரு தூண்டுதலும் இன்றி வாக்களிப்போம் என்று உறுதிமொழி எடுக்கின்றோம்.
இந்நிகழ்ச்சியில் இராமேஸ்வரம், தனி வட்டாட்சியர்(ச.பா.தி ) தனித்துணை வட்டாட்சியர் (தேர்தல்), பள்ளி தலைமை ஆசிரியை, இராமேஸ்வரம், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர், வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் பள்ளியில் உள்ள பணியாளர்கள், வாக்கு சாவடி நிலை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்:பூ.மனோஜ்குமார், இராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.