உலகப் பிரசித்தி பெற்ற இராமநாதசுவாமி திருக்கோயிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தீர்த்தவாரி உற்சவம் மற்றும் ஆற்காடு வாக்கிய பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் தமிழ் புத்தாண்டு சித்திரை முன்னிட்டு அதிகாலை முதல் நடை திறக்கப்பட்டு சுவாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர் .கோவில் சார்பாக ஆற்காடு வாக்கிய பஞ்சாங்கத்தை கோவில் குருக்கள் உதயகுமார் வாசிக்கப்பட்டதில் இந்த ஆண்டில் சுபகரன ஆண்டு பகலில் பிறக்கிறது.
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ராமநாதசுவாமி பர்வதவர்த்தினி அம்பாள் தங்கரிஷப வாகனத்தில் தீர்த்தவாரி உற்சவத்திற்கு எழுந்தருளி ராமேஸ்வரம் நான்கு ரதவீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
ஆண்டுதோறும் சித்திரை முதல் நாளில் அக்னி தீர்த்தக்கரையில் ராமர், சீதை, லக்ஷ்மணன், ஆஞ்சநேயர், சுக்ரீவர் எழுந்தருளி அக்னி தீர்த்த கடற்கரையில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்தநிலையில், நேற்று தை அமாவாசை என்பதால் அதனை தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாரதனை நடைபெற்றது.
இதனை அடுத்து, ராமர், சீதா,லட்சுமணன் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி பஞ்ச மூர்த்திகளுடன் அக்னி தீர்த்த கடற்கரையில் எழுந்தருளி, அங்கு குருக்கள் முன்னிலையில் சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து ராமநாத சுவாமி சன்னதிக்கு அருகே குருக்கர்களின் முன்னிலையில் பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்த பஞ்சாங்கத்தில் இந்தாண்டு தமிழ்நாட்டில் உள்ள அரசியல்வாதி ஒருவனுக்கும், முக்கிய புள்ளிகளுக்கு கண்டம் இருப்பதாகவும், கொரோனா போன்ற பெரும் தொற்று ஏற்படப்போகிறது என்று பஞ்சாங்க குறிப்பில் குருக்கர் வாசித்தார்.
மேலும்,பெட்ரோல்விலை உச்சத்தைத் தொடும். போக்குவரத்து மின்சார கட்டணம் கடுமையாக உயரும். புதிய வரிகளை விதிக்க அரசாங்கம் நேரிடும், இந்தாண்டு இரண்டு சூரிய சந்திர கிரகணம் வரும் சூரிய கிரகணம் 25 .10. 2022 செவ்வாய்க்கிழமை மாலை 5. 14 தொடங்கி 6 .10 வரை இருக்கும் சந்திர கிரகமானது 8 .12 .2022 செவ்வாய்க்கிழமை பகல் 2.39 மணிக்கு தொடங்கி மாலை 6.39 வரை இருக்கும் என கோவில் பஞ்சாங்க வாசிப்பில் தெரிவிக்கப்பட்டது.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(Ramanathapuram)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.