Home /local-news /

மதுபோதையில் அதிவேகமாக கார் ஓட்டிய இளைஞர்- சென்டர் மீடியனில் மோதி விபத்து- ஒருவர் பலி

மதுபோதையில் அதிவேகமாக கார் ஓட்டிய இளைஞர்- சென்டர் மீடியனில் மோதி விபத்து- ஒருவர் பலி

Ramanathapuram |மதுபோதையில் இளைஞர் காரை இயக்கியதால் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதி கார் தூக்கி வீசப்பட்டு கால்வாய்க்குள் விழுந்தது,  சம்பவ இடத்தில் ஒருவர் பழியாகினார்

    மதுபோதையில் இளைஞர் காரை இயக்கியதால் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதி கார் தூக்கி வீசப்பட்டு கால்வாய்க்குள் விழுந்தது, சம்பவ இடத்தில் ஒருவர் பழியாகினார்,.

    மதுரையைச் சேர்ந்த நண்பர்கள் பாலமுருகன்(27) அருண்குமார்(29) ஜெயக்குமார்(26) விஜய்(24) இவர்கள் நான்கு பேரும் நள்ளிரவு நண்பனின் திருமண நிகழ்ச்சிக்கு மதுரையிலிருந்து தொண்டிக்கு காரில் சென்றுள்ளனர். காரை அருண்குமார் ஓட்டியுள்ளார்.

    அருண்குமார் மற்றும் காரிலிருந்து அனைவருமே அதிக மதுபோதையில் இருந்துள்ளனர். நள்ளிரவு 2 மணி அளவில் மதுரை - ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலையில் பரமக்குடி அருகே உள்ள வேந்தோணி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது மதுபோதையில் காரை கட்டுப்படுத்த முடியாமல் சென்டர் மீடியனில் மோதி சென்டர் மீடியனில் இருந்த கால்வாயில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

    இந்நிலையில், விபத்தில் பாலமுருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மற்ற மூவரும் பலத்த காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    திருப்பூரில் திடீரென தீப்பிடித்த இ-பைக்... பொதுமக்கள் அலறல்

    இதையடுத்து, மதுபோதையில் அதிவேகமாக காரை இயக்கி சென்டர் மீடியனில் மோதி தூக்கி வீசப்படும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. மது போதையில் அதிவேகமாக காரை இயக்கியதில் கட்டுப்படுத்த முடியாமல் விபத்தில் சிக்கி இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் அவர்களின் லைசென்ஸ் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும், 18 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் வாகனம் ஓட்டினால் அவர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்படும் மற்றும் தண்டனை அளிக்கப்பட்டும் என்றும், மித வேகம் மிக நன்று என்று காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: Car accident, Ramanathapuram

    அடுத்த செய்தி