Home /local-news /

தனுஷ்கோடி: லாபம் தரும் பாரம்பரிய கரைவலை மீன்பிடிப்பு 

தனுஷ்கோடி: லாபம் தரும் பாரம்பரிய கரைவலை மீன்பிடிப்பு 

தனுஷ்கோடி:

தனுஷ்கோடி: லாபம் தரும் பாரம்பரிய கரைவலை மீன்பிடிப்பு 

ராமேஸ்வரத்தில் கரைவலை மீன்களுக்குத்தான்  பொதுமக்களிடையே மிகப்பெரிய கிராக்கி உள்ளது. ஆழ்கடல் மீன்பிடிப்பு தொழில் இங்கு நடைபெற்றாலும், ஆழ்கடல் மீன்களை விட கரைவலை மீன்களையே ராமேஸ்வரம் மக்கள் நாடி செல்கின்றனர்.

    ஏனென்றால், ஆழ்கடல் மீன்பிடிப்பு என்பது ஒருநாள் முழுவதும் விசைபடகு கடலில் இருந்து பிடிக்கும் மீன்களாகும். பிடிக்கப்பட்ட மீன்கள் ஐஸ்கட்டிகளை வைத்து அது கெட்டுப்போகாமல் இருக்க வைக்கின்றனர். இதன்காரணமாக மீன்களின் சுவை சற்று குறைவாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

    கரைவலை மீன்பிடிக்கும் முறை:–

    கரைவலை மீன்பிடிப்பு என்பது அதிகாலை 5:30 மணிக்கு கரையிலிருந்து சிறிது தூரம் சென்று வலையை கடலில் போட்டுவிட்டு, சிறிது நேரம் கழித்து வலையின் இருமுனையையும், கரையில் 20 - 30 நபர்கள் இரண்டாக பிரிந்து வலையை இழுப்பார்கள்.

    ஒரு நாளுக்கு வரத்து அதிகமாக இருந்தால் ஒரு முறை மட்டுமே மீன்பிடிப்பார்கள், வரத்து குறைவாக இருந்தால் இரண்டு முறை மீன்பிடிப்பார்கள். அப்போது, வலையில் ஏராளமான மீன்கள் சிக்கும். வலையில் துடிக்கும் மீன்களே அப்படியே எடுத்து வந்து விற்பனை செய்வர்கள்.

    பெரியவகை மீன்களான மாவுலா, சீலா, பாரை, ஊழி இவ்வகை மீன்கள் கிலோ ரூ.300 முதல் ரூ.500 வரை விற்கப்படுகிறது.சிறியவகை மீன்கள சூடை, காரல், நெத்திலி, சுவாரை, நகரை, கீரி, கிழைக்கான் போன்ற மீன்கள் ரூ.50லிருந்து ரூ.100 வரையில் விற்கப்படுகிறது.

    இந்த கரைவலை மீன்பிடிப்பு தொழிலை நம்பி தான் தனுஷ்கோடியில் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.

    பாரம்பரிய முறைப்படி பிடிக்கப்படும் மீன்களில் எந்த ஒரு கலப்படமும் இல்லாத காரணத்தால் மீனுக்கு சுவை அதிகம். ஆதலால் தான் ராமேஸ்வரத்தை சுற்றியுள்ள பொதுமக்கள் கரைவலை மீன்களையே நாடி செல்கின்றனர்.

    செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
    First published:

    Tags: Ramanathapuram

    அடுத்த செய்தி