தமிழகத்திலிருந்து நேற்று கச்சத்தீவு அந்தோணியார் திருவிழாவிற்கு சென்ற தமிழக பக்தர்கள் திருவிழா முடிந்து சொந்த ஊருக்கு திரும்பினர்.
கச்சத்தீவில் புனித அந்தோனியார் ஆலய திருவிழா வருடந்தோறும் மார்ச் மாதத்தில் நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவில் இலங்கை, தமிழக பக்தர்கள் கலந்துகொண்டு இருநாட்டு உறவுகளை மேம்படுத்தும் திருவிழாவாக நடைபெறுகிறது.
இந்த நிலையில் இந்த ஆண்டு திருவிழா நேற்று மாலை 5 மணியளவில் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கி சிலுவைப்பாதை நடைபெற்று பின்னர் சிறப்பு திருப்பலியும் நடைபெற்றது.
இதையடுத்து, இன்று மீண்டும் சிலுவை பாதை நடத்தி சிறப்பு திருப்பலி நடத்திய பின்னர் கொடி இறக்கப்பட்டு கச்சத்தீவு திருவிழா நிறைவு பெற்றது.
இதற்காக தமிழகத்தில் இருந்து 76 பக்தர்கள் மட்டுமே சென்றுள்ளனர். இதேபோன்று இலங்கையிலிருந்து கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உட்பட 88 பக்தர்கள் புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று இலங்கை-தமிழக பக்தர்கள் கூட்டு சிறப்பு திருப்பலி ஈடுபட்ட பின்னர் திருவிழா நிறைவு பெற்றதால் இலங்கை, தமிழக பக்தர்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு திரும்பினர்.
மேலும் சொந்த ஊர் திரும்பிய பக்தர்கள் தடை செய்யப்பட்ட பொருட்கள் கொண்டு வந்ததார்களா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திற்கு வந்த பின்னர் முழுமையாக சோதனை செய்தனர்.
கச்சத்தீவில் நட்பு ரீதியிலான பேச்சுவார்த்தையின் போது இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் தமிழக மீனவர்கள் தற்போது சிறையில் உள்ள மீனவர்களையும் அவருடைய படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமேஸ்வரம் மீனவர்கள் கோரிக்கை வைத்ததாக கூறினர்.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(Ramanathapuram)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.