கமுதி - பேரையூர் அருகே சிறுபாலத்தின் தடுப்புச்சுவர் சேதமடைந்து இருப்பதால் வாகன விபத்து ஏற்படும் அபாயம் உருவாகிறது.
இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள சின்ன ஆனையூர் மற்றும் பெரிய ஆனையூர் உட்பட ஐந்திற்க்கும் மேற்பட்ட கிராமங்களில் 800-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
சின்ன ஆனையூர் கிராமத்தின் அருகே வரத்துக்கால்வாயில் தண்ணீர் செல்வதற்கு வசதியாக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சிறுபாலம் அமைக்கப்பட்டது.
முறையாக பராமரிக்கப்படாததால் சிறுபாலத்தின் தடுப்பு சுவர் முழுவதும் சேதமடைந்து பாலத்தின் தூண்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. வேறு வழியில்லாததால் கிராம மக்கள் இருசக்கர வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனத்தில் சிறுபாலத்தை கடந்து செல்லும் அவலம் தொடர்கிறது.
இந்த பாலத்தில் விபத்து ஏற்படுவதற்கு முன்பு தடுப்பு சுவர் அமைத்து அதை முறையாக பராமரிக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர்: பூ மனோஜ்குமார், இராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.