தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து அதே பகுதியில் மையம் கொண்டு 'அசானி' சூறாவளி புயலாக தீவிரமடைந்தது. ஆதலால் பாம்பன் துறைமுகத்தில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இதையடுத்து, அட்சரேகை மற்றும் தீர்க்கரேகை நிக்கோபார் (நிகோபார் தீவுகள்) க்கு மேற்கு-வடமேற்கில் சுமார் 480 கிமீ தொலைவில், போர்ட் பிளேயருக்கு மேற்கே 400 கிமீ (அந்தமான் தீவுகள்), விசாகப்பட்டினத்திலிருந்து 940 கிமீ தென்கிழக்கே (ஆந்திரப் பிரதேசம்) பூரிக்கு (ஒடிசா) தென்-தென்கிழக்கே 1000 கி.மீ. நிலைகொண்டுள்ளதால் பாம்பன், ராமேஸ்வரம், மண்டபம், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என கூறப்படுகிறது.
இதையடுத்து இன்று பாம்பன் துறைமுகத்தில் 2ம் புயல் எச்சரிக்கை கூண்டை தமிழ்நாடு கடல்சார் வாரியம் துறைமுக அதிகாரிகள் ஏற்றியுள்ளனர்.
மேலும் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். தனுஷ்கோடி பகுதியில் கடற்கரை பகுதிகளில் இறங்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(Ramanathapuram)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.