புனித வெள்ளி திருநாளை முன்னிட்டு ராமேஸ்வரம் அடுத்த ஓலைக்குடா பகுதியில் சிலுவைப் பாதை செல்லும் நிகழ்வு நடைபெற்றது, இதில் ஏராளமான மீனவ மக்கள் கலந்து கொண்டனர்.
ராமேஸ்வரம் அடுத்த ஓலைக்குடா பகுதியில் ஆண்டுதோறும் புனித வெள்ளியையொட்டி சிலுவை பாதை நடைபெறுவது வழக்கமாக உள்ளது.
இந்த நிலையில் இன்று புனித வெள்ளி தினத்தை ஒட்டி சங்குமால் கடற்கரை பகுதியில் இருந்து இயேசுபிரான் மற்றும் யூதர்கள் போன்று வேடமணிந்தவர்கள் சிலுவையை இயேசுவின் மீது தூக்கி வைத்து சுமந்து செல்வது போன்றும் யூதர்கள் இயேசுவை சாட்டையால் அடித்து துன்புறுத்தும் போன்று நடித்து இயேசுவின் பிறப்பு, இறப்புகளை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் விதமாக சிலுவைப்பாதை நிகழ்வு நடைபெற்றது.
மேலும் சிலுவை பாதை சென்றுகொண்டிருந்தபோது இந்து மதத்தை சேர்ந்தவர்கள் மதங்களை கடந்து வந்தவர்களுக்கு தண்ணீர் கொடுத்து உதவி செய்தனர்.
பின்னர் ஓலைகுடாவில் உள்ள தேவாலயத்தில் சிலுவைபாதை சென்றடைந்த பின்னர் சிறப்பு திருப்பலியும் நடைபெற்றது. இந்த சிலுவை பாதை இந்நிகழ்வில் பெண்கள் உள்ளிட்ட ஏராளமான மீனவ கிராமங்களில் இருந்து கலந்து கொண்டனர்.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.