Home /local-news /

ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும்.. ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கட்டிட தொழிலாளர்கள்..

ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும்.. ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கட்டிட தொழிலாளர்கள்..

மாதம் ஓய்வூதியம் ரூ.16,000 கோரி  கலெக்டர் அலுவலகத்தை கட்டிட தொழிலாளர்கள்  முற்று

மாதம் ஓய்வூதியம் ரூ.16,000 கோரி  கலெக்டர் அலுவலகத்தை கட்டிட தொழிலாளர்கள்  முற்று

Ramanathapuram | தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி கட்டிட தொழிலாளர் சங்கம் சார்பில் ராமநாதபுரம் பாரதி நகரில் சில முக்கிய அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அந்த சங்கத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கோசங்களை எழுப்பினர்.

மேலும் படிக்கவும் ...
    தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி கட்டிட தொழிலாளர் சங்கம் சார்பில் ராமநாதபுரம் பாரதி நகரில் சில முக்கிய அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அந்த சங்கத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கோசங்களை எழுப்பினர்.

    முக்கிய கோரிக்கைகளாக:-

    தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி கட்டடத் தொழிலாளர் சங்கம் சார்பில் 60 வயதான கட்டுமான தொழிலாளர்கள் அனைவருக்கும் எந்தவித நிபந்தனையும் இன்றி ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

    ஓய்வூதியத்தை மாதம் 16 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும், இ.எஸ்.ஐ.பி.எஃப் திட்டங்களை அமல்படுத்த வேண்டும் நலத்திட்ட உதவிகள் விண்ணப்பித்த ஒரு வார காலத்தில் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

    வாரிய பதிவுக்கு வி.ஏ.ஓ சான்று கூறுவதை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஏ.ஐ.டி.யூ.சி கட்டிட தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதையடுத்து, ராமநாதபுரம் பாரதி நகரில் இருந்து நடைபயணமாக புறப்பட்டு ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்டுமான தொழிலாளர்கள் கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர், இதில் 100-க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கையை கோஷங்களாக எழுப்பினர்.

    செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
    Published by:Arun
    First published:

    Tags: Ramanathapuram

    அடுத்த செய்தி