ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு மின்சார வாரியம் மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மான கழகம் சார்பில் 336 விவசாயிகளுக்கு விவசாய
மின் இணைப்புகள் வழங்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு திமுக ஆட்சி அமைந்தவுடன் மின் இணைப்பு பெற்றுள்ளனர். இந்த மின் இணைப்புபெற்றவர்களிடம் சென்னை தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் இருந்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் கலந்துரையாடினார்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இந்த நிகழ்ச்சியானது நடைபெற்றது.
இந்நிலையில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி எம்.எல்.ஏ காதர்பாட்சா முத்துராமலிங்கம், மாவட்ட ஆட்சியர் சங்கர்லால் குமாவத் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிதாக 336 மின் இணைப்பு பெற்ற விவசாயிகள் கலந்துகொண்டு காணொலி காட்சி மூலம் முதல்வரிடம் உரையாடினார்.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.