இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலைகள் விரிவாக்கப்பட்டு அப்பகுதியில் நடுவே சென்டர் மீடியன் வைக்கப்பட்டுள்ளது. சென்டர் மீடியன்களில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் பொருத்தப்படாமல் காட்சி அளிக்கின்றது.
இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க தேசிய நெடுஞ்சாலைகள் விரிவாக்கப்படுகிறது. தற்போது, இராமேஸ்வரத்தில் நடைபெற்று வருகிறது.
ஆறு மாதங்களுக்கு முன்பு சாலை விரிவாக்கும் பணி நடைபெற்றது. கடந்த ஒரு மாதமாக சாலையின் நடுவே சென்டர் மீடியன் வைக்கும் பணி நடைபெற்றது.
சென்டர் மீடியன் வைக்கப்பட்டு ஒரு மாதங்களுக்கு மேலாக ஆகியும் ஒளிரும் ஸ்டிக்கர்கள் இல்லாததால் இரவு நேரங்களில் வாகனங்கள் செல்வதற்கு இடையூராக உள்ளது.
பெரும் விபத்து ஏற்படுவதற்க்கு முன்பு அதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் சரிசெய்ய வேண்டும் என்று உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.
செய்தியாளர்:பூ.மனோஜ்குமார், இராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.