தூத்துக்குடியிலிருந்து, தேவகோட்டைக்கு உரிய ஆவணங்கள் இன்றி ராமநாதபுரம் வழியாக கொண்டு சென்ற யானையைசிறை பிடித்தவனத்துறை அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம் வனச்சரகர் தலைமையிலான வனத்துறையினர் ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தூத்துக்குடியிலிருந்து சிவகங்கை மாவட்டம் தேவகோட்டைக்கு உரிய ஆவணங்கள் இன்றி ஒரு யானையை நான்கு சக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்படுவதாக ராமநாதபுரம் வனத்துறை அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, ராமநாதபுரம் வனத்துறை அதிகாரிகள் யானை கொண்டு செல்லப்படும்வாகனத்தை பட்டணம்காத்தான் பகுதியில்வழிமறித்து விசாரணை நடத்தியதில் யானை கொண்டு செல்வதற்கான எந்த ஒரு ஆவணங்களும் அவர்களிடம்இல்லை என தெரியவந்துள்ளது.
உரிய அனுமதி பெறாமல் புதுக்கோட்டையில் நடைபெற உள்ள சுமங்கலி பூஜை திருவிழாவிற்கு இந்த யானையை பாகன் சூர்யா, தூத்துக்குடியில்இருந்து தேவகோட்டைக்கு கொண்டு சென்று திரும்பியது தெரியவந்தது.
இதையடுத்து, யானை மற்றும் யானையை கொண்டுசென்ற இரண்டு நபர்களை சிறைபிடித்து ராமநாதபுரம் வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்று விசாரித்து வருகின்றனர்.
மேலும், யானை கொண்டு செல்வதற்கான உரிய ஆவணங்களை சமர்ப்பிக்கப்பட்டால் அபராதம் விதித்து யானை விடுவிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் உரிய ஆவணம் சமர்ப்பிக்கபட்டதை தொடர்ந்து ரூ. 50,000 அபராதம் விதிக்கப்பட்டு யானை அனுப்பி வைக்கப்பட்டது.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(Ramanathapuram)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.