Home /local-news /

தண்டவாளத்தில் இருசக்கர வாகனத்தை எரித்து ரயிலை கவிழ்க்க முயற்சி

தண்டவாளத்தில் இருசக்கர வாகனத்தை எரித்து ரயிலை கவிழ்க்க முயற்சி

தண்டவாளத்தில்

தண்டவாளத்தில் இருசக்கர வாகனத்தை எரித்து; ரயிலை கவிழ்க்க முயற்சி

ராமேஸ்வரம் அருகே ரயில் தண்டவாளத்தில் இரு சக்கர வாகனம் எரிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ராமேஸ்வரம் அருகே ரயில் தண்டவாளத்தில் இருசக்கர வாகனத்தை எரித்த மர்மநபர், 100 மீட்டர் முன்பாகவே ரயில் இன்ஜின் ஓட்டுனர் ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ரயிலைக் கவிழ்க்க மர்ம நர்களின் சதியா என பல்வேறு கோணங்களில் ரயில்வே போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

    ராமேஸ்வரம் அடுத்த செம்மமடம் நகர் பகுதியில் இன்று அதிகாலை 3 மணியளவில் ரயில் தண்டவாளத்தில் குறுக்கே இருசக்கர வாகனத்தை மர்ம நபர் தீயிட்டு எரித்துள்ளனர்.

    இந்நிலையில், வாரம் ஒரு முறை மட்டும் ராமேஸ்வரத்துக்கு வரக்கூடிய ஜெகந்திராபாத் ரயில் அதிகாலை 3 மணியளவில் வந்து கொண்டிருந்தபோது தண்டவாளத்தில் இருசக்கர வாகனம் கொழுந்துவிட்டு எரிந்ததை பார்த்த ரயில் இன்ஜின் டிரைவர் 100 மீட்டர் முன்பாக ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    இதையடுத்து, ராமேஸ்வரம் ரயில்வே காவல் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு ரயில்வே போலீசார் மற்றும் ஊழியர்கள் விரைந்து வந்து எரிந்து கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தை அப்புறப்படுத்திய பின்னர் 40 நிமிடம் தாமதமாக ரயில் ராமேஸ்வரம் ரயில் நிலையத்தை வந்து அடைந்துள்ளது.

    ரயில்வே போலீசார் மர்ம நபர்கள் ரயில் தண்டவாளத்தின் குறுக்கே இருசக்கர வாகனத்தை எரித்து ரயிலை கவிழ்க்கும் சதியில் ஈடுபட்டனரா அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காக இருசக்கர வாகனத்தை ரயில் தண்டவாளத்தில் எடுத்தார்களா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும், இருசக்கர வாகனம் யாருடையது என்று ரயில்வே போலீசார் விசாரணை நடத்தியதில் ராமேஸ்வரம் அடுத்த மெய்யம்புள்ளி பகுதியை சேர்ந்த ராஜசேகரன் என்பவருடைய இரு சக்கர வாகனம் என்றும் அவரை காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் நேற்று நள்ளிரவில் இருந்து எனது இரு சக்கர வாகனத்தை காணவில்லை என்று கூறியுள்ளார்.

    இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்டது யார் என்று ரயில்வே காவல்துறையினர் மற்றும் தங்கச்சிமடம் நகர் காவல் நிலைய காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Ramanathapuram

    அடுத்த செய்தி