இ
ராமநாதபுரம் மாவட்டத்தில் வனத்துறையினர் மற்றும் பறவைகள் ஆர்வலர்கள் இணைந்து 28 மற்றும் 29ஆம் தேதி கடற்கரை பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
இவ்வாண்டு இராமநாதபுரம் மாவட்டத்தில் மழை பெய்து நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பி உள்ளதால் பறவைகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கடற்கரை பகுதிகள், உள்ளூர் நீர்நிலைகள், நிலப்பரப்புகள் என மூன்று வகைப்படுத்தி பறவைகளை கணக்கெடுக்க வனத்துறையினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
ஆண்டுதோறும் அனைத்து கடற்கரை பகுதிகளிலும் ஏராளமான மற்றும் வெளிநாட்டு பறவை இனங்கள் இனப்பெருக்கத்திற்காக வருவது வழக்கம். அதேபோல் இந்தாண்டும் ஏராளமான பறவைகள் குவிந்துள்ளன.
இராமநாதபுரம் மாவட்டத்தில் 4 பறவைகள் சரணாலயங்கள் உள்ளன. சித்திரங்குடி, தேர்த்தங்கல், மேலச் செல்வனுார், காஞ்சிரங்குடி ஆகிய இடங்களில் பறவைகள் சரணாலயங்கள் உள்ளன. மேலும், தனுஷ்கோடி, காரங்காடு, வாலிநோக்கம், மணலி தீவு ஆகிய கடற்கரை பகுதிகளிலும் பறவைகள் ஏராளமான காணப்படுகின்றன.
கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி இரண்டு நாட்கள் தனுஷ்கோடி, காரங்காடு, வாலிநோக்கம், மணலி தீவு உள்ளிட்ட பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு முகாம் நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், இராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.