ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை அடுத்த பாம்பன் ஊராட்சி மன்றத்தில், மாவட்ட சமூக நலத்துறை சார்பில் குழந்தைகள் திருமண தடை சட்டம் மற்றும் பெண் கல்வி குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இம்முகாமில், குழந்தைகள் திருமண தடைச்சட்டம் மற்றும் பெண் குழந்தை கல்வி அவசியம் குறித்து கூடியிருந்த பெண்களிடையே எடுத்துரைக்கப்பட்டது.
மேலும், பெண் குழந்தைகளுக்கு குழந்தை திருமணம் நடைபெற்றால் 1098 என்ற Child Helpline நம்பருக்கு தொடர் கொண்டு உதவி கேட்கலாம் போன்ற அறிவுரைகள் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி நிகழ்ச்சி நடைபெற்றது.
இம்முகாமில் கலந்து கொண்ட அனைவரையும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பேட்ரிக் வரவேற்றார். பாம்பன் ஊராட்சி மன்றத் தலைவர் அகிலா பேட்ரிக் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இம்முகாமில் பேசிய மாவட்ட சமூகநல அலுவலர் சாந்தி, குழந்தைகள் திருமண தடைச் சட்டம் பெண் குழந்தை கல்வி குறித்த அவசியம் குறித்து கூடியிருந்த பெண்களிடையே எடுத்துரைத்தார்.
மேலும் தங்கள் கிராமங்களில் பெண் குழந்தைகளுக்கு குழந்தை திருமணம் நடைபெற்றால் 1098 என்ற நம்பருக்கு தகவல் தெரிவித்து உதவிடுமாறு கேட்டுக் கொண்டார்.
பாம்பன் ஊராட்சி மன்ற செயலர் விசுவநாதன் நன்றி தெரிவித்தார். வட்டார விரிவாக்க அலுவலர் பிரேமா , வழிகாட்டி செயல் அலுவலர் தமயந்தி, மண்டபம் ஒன்றிய ஊர் நல அலுவலர் நாகேஸ்வரி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.