ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மேலாண்மை குழு சார்பில் விழிப்புணர்வு மற்றும் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
முதுகுளத்தூர் தாலுகாவில் அரசு பள்ளிகளில் செயல்பட்டு வரும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் சார்பில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், குறு நாடகம், பாடல்கள், கண்காட்சி வாயிலாக பள்ளி மேலாண்மை குழுவின் செயல்பாடுகள் குறித்து மாணவர்களுக்கு தெரிவிக்கின்றனர்.
மேலும், ஊரடங்கு காரணத்தினால் பள்ளிகள் மூடப்பட்டு திறக்கப்பட்டுள்ளன. இதனால் பள்ளிக்கு வரும் மாணவர்கள் கற்க, ஆர்வத்தை தூண்டுவதற்காக நிகழ்ச்சிகள் ஒவ்வொரு பகுதியாக நடைபெறுகிறது.
முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வட்டார கல்வி அலுவலர் வேல்முருகன் தலைமையில், தலைமை ஆசிரியர் விக்டோரியா ராணி, பள்ளி மேலாண்மைக்குழு ஒருங்கிணைப்பாளர் உமாதேவி, மேலாண்மைக்குழு தலைவர் சிவராணி, உதவி ஆசிரியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மாணவர்களின் பெற்றோர்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(Ramanathapuram)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.