பரமக்குடியில் கொளுத்தும் வெயிலுக்கு இதமாக பேருந்து நிலையத்தில் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் பொதுமக்களுக்கு இலவசமாக நீர், மோர், வழங்குகிறார்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். வெயில் காரணமாக பெரும்பாலான இடங்களில் நீர், மோர் பந்தல் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே எமனேஸ்வரம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் செய்யது கனி (45). இவர் கொரோனா வைரஸ் தொற்று ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு இலவசமாக முககவசம், இலவச ஆட்டோ பயணம் உள்ளிட்டவற்றை வழங்கி வந்தார்.
இதனை தொடர்ந்து கோடை வெயில் காரணமாக பரமக்குடி பேருந்து நிலையத்தில் உள்ள பயணிகளுக்கு இலவசமாக மோர் வழங்கினார். வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் குழந்தைகள், முதியவர்கள் வெளியே செல்ல வேண்டாம் என பொதுமக்களுக்கு எடுத்துரைப்பதுடன் இலவசமாக மோர் வழங்கி வருவதை பலரும் பாராட்டினர்.
இதுகுறித்து அவர் கூறுகையில்:-
வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொதுமக்களுக்கு இதுபோன்ற பானங்கள் வழங்கினால் வேலைக்கு செல்பவர்கள் பள்ளிக்கு செல்பவர்கள் புத்துணர்ச்சியுடன் இருப்பார்கள் என்றார்
மேலும், இதைப்பார்த்து விட்டு இதுபோன்று தினமும் வழங்க யாராவது முன்வரவேண்டும் என்ற நோக்கத்தில் நான் செய்து வருகின்றேன் என்றார்.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.