ஆட்டோ ஓட்டும் தொழிலை பாதுகாக்க கோரி ராமேஸ்வரத்தில் ஏஐடியுசி ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் ராமேஸ்வரம் பேருந்து நிலையம் எதிரே நடைபெற்றது.
முக்கிய கோரிக்கைகளாக:-
ஓட்டுனர் உரிம கட்டணம் , புதிய வாகன பதிவு கட்டணம், இன்சூரன்சு கட்டணம், FC கட்டணம், உள்ளிட்ட ஆட்டோ வாகனம் சம்பந்தமாக உயர்த்தப்பட்ட அனைத்து கட்டணங்களையும் நீக்க வேண்டும்.
பழைய கட்டணத்தையே நடைமுறைப்படுத்த வேண்டும். பெட்ரோல், டீசல், கேஸ், விலையை தொடர்ந்து உயர்த்துவதை தவிர்க்க வேண்டும்.
ஆட்டோ டிரைவர்களுக்கு மானிய விலையில் பெட்ரோல், டீசல், கேஸ், வழங்க வேண்டும். மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மோட்டார் வாகன சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்தக்கூடாது.
ராமேஸ்வரத்தில் முக்கிய வீதிகளை அனைத்தையும் நோபார்க்கிங் என அறிவித்து வழக்கு பதிவு செய்வதை தவிர்க்க வேண்டும், ராமேஸ்வரம் நகர் பகுதியில் பழுதடைந்த அனைத்து சாலைகளையும் சீரமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய-மாநில அரசுகளின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்தும் , ஏ.ஐ.டி.யு.சி ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் சார்பில் பேருந்து நிலையம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் ஏ.ஐ.டி.யு.சி மாவட்ட பொது செயலாளர் ராஜன் சிறப்புரையாற்றுகிறார் ராமேஸ்வரம் தீவு ஆட்டோ சங்க தலைவர்கள் செந்தில், ஜீவானந்தம், முனிஸ்வரன், பாண்டி, கருப்பையா உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர், அனைத்து ஆட்டோ மற்றும் வாகன ஓட்டிகளும் ஆர்பாட்டத்தில் பங்கேற்றனர்.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(Ramanathapuram)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.