இ
ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல்துறையினர் பயன்படுத்திய பழைய கழிவு வாகனங்கள் ஏலம் விடப்பட்டன.
பல ஆண்டுகளாக ஆயுதப்படை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்கள் பொது ஏலம் விடப்பட்டது. இருசக்கர வாகனங்கள் ஆயிரம் ரூபாயும், நான்கு சக்கர வாகனங்கள் இரண்டாயிரம் ரூபாயும் முன்பணம் கட்டி 121-பேர் இணையதளத்தில் விண்ணப்பித்து ஏலத்தில் பங்கேற்றனர்.
வாகன ஏலத்தில் 38 இருசக்கர வாகனங்களும், 18 நான்கு சக்கர வாகனங்களும் ஏலம்போனது. இருசக்கர வாகனம் அதிகபட்சமாக ரூ.26,000 வரையிலும் நான்கு சக்கர வாகனங்கள் அதிகபட்சமாக ரூ.1,12,000 வரையிலும் ஏலம் போனது. மொத்தமாக ஏலம்போன வாகனங்களின் மதிப்பு பதினான்கு லட்சத்து தொண்ணூற்று இரண்டாயிரம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர்:பூ.மனோஜ்குமார், இராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.