இராமேஸ்வரம் இராமநாதசாமி திருக்கோவிலில் (31.01. 2022) தை அமாவாசையை முன்னிட்டு அக்னிதீர்த்த கடலில் பக்தர்கள் நீராடி தரிசிக்கலாம் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தை அமாவாசையை முன்னிட்டு இராமேஸ்வரம் இராமநாத சுவாமி திருக்கோவிலுக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்வதற்கு இராமேஸ்வரம் இராமநாதசுவாமி திருக்கோயிலில் நிர்வாகம் சார்பில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு வருகிறது.
தை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரதிற்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து அக்னி தீர்த்த கடற்கரையில் நீராடி விட்டு பின்னர் நம்முடன் வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து விட்டு கோவிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடி பின்னர் சாமி தரிசனம் செய்து வருவது வழக்கம்.
இந்த சூழலில் பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி தவிக்காமல் வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்வதற்காக கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு தடுப்புகள் அமைத்து வரிசைப் படுத்தும் விதமாக, தடுப்புகள் அமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், இராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(Ramanathapuram)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.