Home /local-news /

பண்டைய தமிழர்களின் வாழ்கை முறையை காட்சிப்படுத்திய அரசு பள்ளி மாணவர்கள்!

பண்டைய தமிழர்களின் வாழ்கை முறையை காட்சிப்படுத்திய அரசு பள்ளி மாணவர்கள்!

தொன்மைப் பாதுகாப்பு மன்றத் துவக்க விழா ;தொல் பொருட்கள் கண்காட்சி

தொன்மைப் பாதுகாப்பு மன்றத் துவக்க விழா ;தொல் பொருட்கள் கண்காட்சி

Ramanathapuram : ராமநாதபுரம் மாவட்டம் சாத்தான்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தொன்மைப் பாதுகாப்பு மன்றத் துவக்க விழா மற்றும் தொல் பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது.

    ராமநாதபுரம் மாவட்டம் சாத்தான்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தொன்மைப் பாதுகாப்பு மன்றத் துவக்க விழா மற்றும் தொல் பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது.

    தொல் பொருட்கள் கண்காட்சியில் பழைய, புதிய, நுண் கற்காலக் கருவிகள், கருப்பு சிவப்பு நிற பானை ஓடுகள், ரோமானிய, சீன நாட்டுப் பானை ஓடுகள், இரும்புத்தாதுக்கள், இரும்புக் கழிவுகள், வட்டச் சில்லுகள், கூரை ஓடுகள், மான் கொம்புகள், பானைக் குறியீடுகள், புதைபடிமங்கள், கல்வெட்டுகளின் மைப்படிகள், ஓலைச்சுவடிகள், எழுத்தாணிகள் ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன, இவற்றை மாணவ மாணவிகள் நேரில் பார்த்து அறிந்து கொண்டனர்.

    இது குறித்து, தொன்மைப் பாதுகாப்பு மன்றச் செயலர் செல்வக்குமார் கூறுகையில், தமிழ்நாட்டின் கலை, பண்பாடு, வரலாறு, தொல்லியலை பள்ளி மாணவர்கள் அறிந்துகொள்ளவும், பாரம்பரியச் சின்னங்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வை அவர்களிடம் ஏற்படுத்தவும் பள்ளிகளில் தொன்மைப் பாதுகாப்பு மன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றார்.

    பள்ளிக்கல்வித்துறை மூலம் 1000 பள்ளி ஆசிரியர்களுக்கு தொல்லியல் பயிற்சி கொடுக்கும் பணிகள் தொடங்கி உள்ளன. ஒரு மாவட்டத்திற்கு 30 ஆசிரியர்கள் வரை பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    இப்பயிற்சி மூலம் தொன்மைப் பாதுகாப்பு மன்றங்களை அனைத்துப் பள்ளிகளிலும் செயல்படுத்தி மாணவர்களிடம் தொல்லியல், அகழாய்வு, கல்வெட்டு, பாரம்பரியம் பற்றிய விழிப்புணர்வை உருவாக்க முடியும்" என்றார்.

    இந்த கண்காட்சியில் பள்ளித் தலைமையாசிரியர் வி.சிந்து தலைமை தாங்கினார். பட்டதாரி ஆசிரியர் கா.செந்தில் வடிவேலன் முன்னிலை வகித்தார்.

    செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Govt School, Ramanathapuram

    அடுத்த செய்தி