Home /local-news /

தொழிற்பள்ளி துவங்கவும், அங்கீகாரம் பெறவும் விண்ணப்பங்கள் வரவேற்பு

தொழிற்பள்ளி துவங்கவும், அங்கீகாரம் பெறவும் விண்ணப்பங்கள் வரவேற்பு

இராமநாதபுரம் மாவட்டத்தில் 2022 -2023 கல்வியாண்டிற்கு தொழிற்பள்ளி துவங்குதல் மற்றும் அங்கீகாரம் நீட்டிப்பு பெருவதற்கும் விண்ணப்பம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் தொழிற்பள்ளிகள் துவங்கவும் மற்றும் அங்கீகார நீட்டிப்பு மற்றும் கூடுதல் தொழில் பிரிவுகள் தொடங்கவும் விண்ணப்பிக்கலாம்.

    இராமநாதபுரம் மாவட்டத்தில் 2022--2023ம் கல்வியாண்டிற்கு தொழிற்பள்ளிகள் துவங்கவும் முன்னாள் உள்ள தொழிற்பள்ளிகளுக்கு அங்கிகாரம் நீட்டிக்கவும், கூடுதல் தொழில்பிரிவுகள் தொடங்க விரும்புவோர் 2022 ஏப்ரல் மாதம் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட திறன்பயிற்சி அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இராமநாதபுரம் மாவட்ட திறன்பயிற்சி அலுவலகம் உதவி இயக்குனர் கூறியதாவது:

    2022 -2023 கல்வியாண்டிற்கு தொழிற்பள்ளி துவங்குதல் மற்றும் அங்கீகாரம் நீட்டிப்பு பெருவதற்கும் விண்ணப்பம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பிப்போர் www.skilltraining.tn.gov.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம்.

    மேலும், ஏதேனும் விபரங்களுக்கு மாவட்ட திறன்பயிற்சி அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரடியாகவும்அல்லது 04567- 231 075 என்ற எண்ணிற்கும் தொடர்பு கொண்டு தகவல்கள் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

    செய்தியாளர்:பூ.மனோஜ்குமார், இராமநாதபுரம்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Ramanathapuram

    அடுத்த செய்தி