ராமேஸ்வரத்தில் இன்று ஸ்ரீமத் சிவ சேதுராமன் முருகவேல் அன்னதான மடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இங்கு ராமேஸ்வரத்திற்கு வரும் பக்தர்களுக்கு 24 மணிநேரமும் அன்னதானம் வழங்குவதற்காக திறக்கப்படுகிறது.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் உலகப்பிரசித்தி பெற்றது இங்கே தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் வடமாநிலத்தவர்கள் தினந்தோறும் வருகை புரிகின்றனர்.
ராமேஸ்வரத்தில் பகல் நேரத்தில் உணவு கிடைத்தாலும் இரவு நேரத்தில் பக்தர்கள் சுற்றுலா பயணிகளுக்கு உணவகங்கள் அடைக்கப்படுவதால், உணவு இன்றி திண்டாடுகின்றனர்.
இதனை அறிந்த ஸ்ரீமத் சிவ சேதுராமன் முருகவேல் 24 நான்கு மணிநேரமும் அன்னதானம் வழங்குவதற்காக அன்னதான மடம் ஒன்று கட்டவேண்டும் என்று தீர்மானித்துள்ளார். தினந்தோறும் அங்கு வரும் வாசகர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு விருப்பு வெறுப்பின்றி உணவு வழங்க வேண்டும் என்றும் தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் என்றும் ராமேஸ்வரம் பூமியில் அன்னதானம் செய்வது முன்னோர்களுடைய ஆத்மாக்களின் ஆசீர்வாதம் கிட்டும் என்றும் கூறினார்.
மேலும் இவ்விடத்திற்கு அருகிலேயே 108 அடி கொண்ட அனுமன் சிலை வருவதற்கான வேலை நடைபெறுகிறது, சிறிது காலத்தில் அதுவும் சுற்றுலா தலமாக மாறும் எனவே அங்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் வடமாநிலத்தவர்கள் அங்கு சென்று விட்டு வரும் பொழுது அவர்களுக்கு அன்னதானம் வழங்கி பசி போக்க படும் என்று கூறினார்.
இந்நிகழ்ச்சி, ஆன்மீக சொற்பொழிவாளர் மங்கையர்கரசி கலந்து கொண்டு ஆன்மீக சொற்பொழிவு ஆற்றினார். சூர்யா பில்டர்ஸ் நிறுவனர் ஸ்ரீதர் மற்றும் சிவ சாதுக்கள் சிவ தொண்டர்கள் பக்தர்கள் ராமேஸ்வரம் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு பூமி பூஜை செய்தனர்.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.