ஹோம் /Local News /

தலைமன்னார் டூ அரிச்சல்முனை.. கடலில் குழுவாக நீந்தி ஆந்திர மாணவர்கள் சாதனை.!

தலைமன்னார் டூ அரிச்சல்முனை.. கடலில் குழுவாக நீந்தி ஆந்திர மாணவர்கள் சாதனை.!

X
குழுவாக

குழுவாக சேர்ந்து முதன் முதலில் நீந்தி சாதனை !!

Ramanathapuram | ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த ஆறு நீச்சல் வீரர்கள் இலங்கையில் தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரை குழுவாக முதல் முறையாக நீந்தி சாதனை.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த ஆறு நீச்சல் வீரர்கள் இலங்கையில் தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரை குழுவாக முதல் முறையாக நீந்தி சாதனை.

இலங்கை தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை பாக் ஜலசந்தி கடற்பகுதியை நீந்தி கடப்பதற்காக கடந்த மாதம் டெல்லியில் உள்ள வெளியுறவுதுறை, பாதுகாப்புதுறை அமைச்சகங்கள் மற்றும் இலங்கை தூதரகத்திற்கு அனுமதி கோரி கடிதம் அனுப்பி இருந்தனர்,

இந்திய-இலங்கை இரு நாட்டு அனுமதியும் கிடைக்க ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த ஆறு நீச்சல் வீரர்கள் நேற்று இரவு இலங்கை தலைமன்னாரில் இருந்து நீந்த ஆரம்பித்து இன்று காலை தனுஷ்கோடி வரை நீந்தி வந்து சாதனை படைத்தனர்.

நீச்சலில் பள்ளி மற்றும் மாணவ மாணவிகளான 4 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் சாத்விக்(15), அலங்குருதிக் (13) ஜார்ஜ் (15), ஜான்சன் (12), பேபிஸ்வந்தனா (17), பிரான்ஸ் ராகுல் (18), ஆகியோர் நீந்தி வந்தனர்.

இவர்கள் நேற்று முன்தினம் ராமேஸ்வரத்தில் இருந்து கிளம்பி அன்று இரவு நீந்த தயாராகினர், காலநிலை மாற்றத்தால் இவர்கள் நீங்குவதற்கு அனுமதி கிடைக்காததால் நேற்று இரவு காலநிலை சரியானதால் நீந்த ஆரம்பித்தனர்.

இதையடுத்து, நேற்று இரவு 1 மணிக்கு இலங்கையில் தலைமன்னாரில் இருந்து நீந்த ஆரம்பித்து 9 மணிநேரம் 27 நிமிடங்கள் வரை நீந்தி இன்று காலை 10:27 மணிக்கு தனுஷ்கோடி வந்தனர்.

இதுவரையிலும் நீந்தியவர்கள் தனித்தனியாகவே நீச்சலில் சாதனை படைத்தனர் குழுவாக சேர்ந்து நீந்தியது இதுவே முதன்முறையாகும், என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் அனைவரும் இதற்கு முன்னர் மாவட்ட அளவிலும், தேசிய அளவிலும் நீந்தி சாதனை படைத்துள்ளனர், ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு முதல்முறையாக சாதனை படைத்துள்ளனர்.

செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.

First published:

Tags: Ramanathapuram