ராமேஸ்வரத்தில் கொரோனாவிற்கு முன்பு இயக்கப்பட்ட அனைத்து தினசரி ரயில்களையும் மீண்டும் இயக்க கோரி ஏஐடியுசி தொழிற்சங்கம் சார்பில் ராமேஸ்வரம் நிலைய அதிகாரியிடம் மனு அளித்தனர்.
இராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம். இந்தியாவில் புண்ணியத் தலங்களில் ஒன்று. இங்கு தினசரி பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் ரயில் மூலம் வந்து செல்கின்றனர், இவர்களுக்கு போதுமான ரயில் இல்லாததால் சிரமத்திற்கு உள்ளாவதாக பயணிகள் கூறுகின்றனர்.
இந்நிலையில், கடந்த 2020–ம் ஆண்டு கொரோனா நோய்த்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை ரயில்கள் நிறுத்தப்பட்டது. இதன் பின்னர் முன்பதிவு செய்யப்பட்ட ரயில்கள் கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையை பின்பற்றி குறைந்தளவு பயனிகளுடன் இயக்கப்பட்டது. தற்போது கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ராமேஸ்வரத்திலிருந்து மதுரைக்கு தினமும் காலை 5:30, 11: 20 மணி, மாலை 6:00 மணி, மதுரையிலிந்து ராமேஸ்வரத்திற்கு காலை 6:00, மதியம் 12:00 மணி, மாலை 6:15 மணிக்கு பயணிகள் ரயில்கள் இயக்கப்பட்டது தற்போது மேற்கண்ட ரயில் இரு வழித்தடங்களிலும் தலா ஒரு முறை மட்டுமே இயக்கப்படுகிறது.
ராமேஸ்வரம்- மதுரை பயணிகள் ரயிலை இரு வழித்தடங்களிலும் தினசரி மூன்று முறையும் இயக்க வேண்டும், மேலும் வாரத்திற்கு மூன்று தினம் இயங்கிவந்த ராமேஸ்வரம் - கன்னியாகுமரி அதிவிரைவு ரயில் மற்றும் வட மாநிலங்களுக்கு இயக்கப்பட்ட வாராந்திர ரயில்கள் மீண்டும் இயக்க கோரி ஏஐடியூசி தொழிற்சங்கம் சார்பில் ரயில்நிலைய அதிகாரியிடம் மனு அளித்தனர்.
இதில், மீனவர் சங்க மாநில செயலாளரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் சி.ஆர்.செந்தில்வேல் தலைமை வகித்தார். நிர்வாகிகள் ஜீவானந்தம், பாண்டி, ஆ.செந்தில் ஏ.கே.முனீஸ்வரன், ஜோதிபாசு, தினேஷ்குமார், ஆதித்தன் ஏ.கருப்பையா, சு.கமலசங்கர், செல்வம், ஞானப்பிரகாசம் ரயில்வே நிலைய ஆட்டோ தொழிலாளர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.